1.கிரீன் டீ  நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க செய்து நமது  வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.பசிஎடுக்கும் உணர்வு குறைக்கபடுவதால் குறைந்தளவே சாப்பிட முடியும் .ஆதலால் உடலில் தேவையற்ற ஆற்றல் சேர்வது  குறைக்கபடுகிறது. இயற்கையான வழியில் உடல் இளைக்க கிரீன் டீ உதவுகிறது .

2.நமது உடலில் இருக்கும் அதிகப்படியான நீர் நம் உடல் குண்டாக தோன்றுவதற்கு ஒரு காரணமாகும். அத்தகைய நீரினை கிரீன் டீ உடலிலிருந்து குறைப்பதால் மெலிதான தோற்றத்தை அடையலாம்.

3.கிரீன் டீ-யில் catechins என்ற வேதிப்பொருள் இருப்பதால் உடலை வெப்பப்படுத்தும் பணியை செய்கின்றன.இது உடலில் உள்ள  கொழுப்பை எரித்து ஆற்றலை கொடுக்கிறது .இதனால் கொழுப்பு இழக்கப்படுகிறது, உடல் எடை குறைக்கபடுகிறது .

4. உடலில் கார்போஹைட்ரேட்டை மெதுவாக செயல்பட  வைப்பதால் இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைக்கபடுகிறது . இதனால் குளுகோஸ் கொழுப்பாக மாறும் அளவும் குறைக்கபடுகிறது.உடல் எடையும் குறைக்கபடுகிறது .


கிரீன் டீ-யின்  பயன்கள் : 


  1. கேன்சர் உருவாவதை தடுக்கிறது.
  2. சர்க்கரை நோயை கட்டுபடுத்துகிறது.
  3. இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
  4. ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும், முகப்பரு மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது.
  5. எடை இழப்பிற்கு உதவி செய்கிறது .
  6. முதுமை அடைவதை தடுக்கிறது ,இளமையாக இருக்க உதவுகிறது.
  7. சீரான செரிமானத்திற்கு உதவுகிறது .
  8. குடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குகிறது.
  9. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றை பாதுகாக்கிறது .
  10. எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
  11. சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.