ஒட்டுண்ணிகளை (parasites )அழிக்க உதவும் உணவு பொருட்கள் .

குடற்புழுக்கள் ,நாக்குபூச்சி ,நாடாப்புழு கொக்கிப்புழு போன்றவற்றை இயற்கையான உணவு பழக்கங்கள் மூலம் நீக்கலாம் .

பூசணி மற்றும் சூர்ய காந்தி விதைகள்.. இவை அங்காடிகளில் பாக்கெட்டுகளில் விற்பனையாகிறது .

தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில்
ஐந்தாறு விதைகளை தோலை நீக்கி சாப்பிட வேண்டும் .

பப்பாளிபழம் .

குடற்புழுக்கள் மற்றும் நாடாபுழுக்களை அழிக்கும் குணமுள்ளது பப்பாளிபழம் .

மாதுளை

இப்பழம் குடற்புழுக்களை அழிக்க வல்லது .

சிவப்பு மிளகாய் (cayenne pepper )
சகல வித பல்லுருவி ஒட்டுண்ணிகளை தடுக்கும் குணமுள்ளது இச்சிவப்பு மிளகாய் .

இளநீர் ..

அதிகாலையில் ஒரு இளநீரை வெட்டி அதன் நீரை அருந்தி வழுக்கை தேங்காயும் சாப்பிட வேண்டும்

பிறகு குறைந்தது மூன்று மணிநேரத்துக்கு எதையும் சாப்பிடக்கூடாது ..மாதம் ஒருமுறை இப்படி செய்து வர குடல் சுத்தமாகும் இளநீர் மற்றும் அதன் இளந்தேங்காய் பாக்டீரியா ,பூஞ்சை ,வைரஸ் ஆகியவற்றை எதிர்க்கும் தன்மையுள்ளது

பூண்டு ..

பூண்டு தினமும் உணவில்செர்க்கும் ஒரு இன்றியமையா உணவுப்பொருள்
அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு பூண்டு பற்களை மென்று விழுங்க ..நாக்குப்பூச்சி ,நாடாப்புழு ஆகியவற்றை குடற்பகுதியில் இருந்து வெளியேற்றும் .

அன்னாசிப்பழத்தில் உள்ள bromelain எனும் நொதிப்பொருள் குடற் பகுதியிலுள்ள நாடாபுழுக்களை அழிக்கும் குணமுள்ளது .

இந்த உணவுபொருட்களை சாப்பிட்டால் மட்டும் போதாது ..தினமும்வெளியில் சென்று வீடு திரும்பியதும் வெது வெதுப்பான நீரில் கைகளை கழுவணும் ,வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கும் கால்நடை மருத்துவரிடம் அழைத்து சென்று தவறாமல் பூச்சி மருந்துகளை கொடுக்க வேண்டும் .அசைவ உணவு வகைகளை நன்கு வேக வைத்து சமைக்க வேண்டும் .காய்கறி பழங்கள் கீரை வகைகளை உப்பு சேர்த்த நீரில் ஊறவைத்து ஓடும் குழாய் நீரில் கழுவ வேண்டும் .